'கண்ணால் காண்பது மெய்' : 'தினமலர்' தலைப்பை தேர்வு செய்த தேர்தல் கமிஷன் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கண்ணால் காண்பது மெய்' : 'தினமலர்' தலைப்பை தேர்வு செய்த தேர்தல் கமிஷன்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 'கண்ணால் காண்பது மெய்' :  'தினமலர்' தலைப்பை தேர்வு செய்த தேர்தல் கமிஷன்

திருப்பூர்: வாக்காளர் மனதில் பதியச் செய்யும் வகையில், 'தினமலர்' நாளிதழில் வெளியான, 'கண்ணால் காண்பது மெய்' என்ற தலைப்பை தேர்வு செய்து, தலைமை தேர்தல் கமிஷன், 'விவி - பேட்' விழிப்புணர்வை துவக்கியுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரத் தில் பதிவாகும் ஓட்டு விபரத்தை, வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதி, 'விவி - பேட்' என அழைக்கப்படுகிறது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் உண்மை தன்மையை உறுதி செய்யும் வகையில், தலைமை தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கான விழிப்புணர்வை முடுக்கி விட்டுள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில், மாவட்டத்துக்கு ஒரு சட்டசபை தொகுதியில், 'விவி - பேட்' பயன்படுத்தப்பட்டது.வாக்காளரிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், வரும் லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், 'விவி - பேட்' பயன்படுத்தப்பட உள்ளது. இதன்படி, விரும்பிய வேட்பாளருக்கு, தங்கள் ஓட்டு பதிவானதை, ஒவ்வொரு வாக்காளரும் உறுதி செய்து கொள்ளலாம்.லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும், 'விவி - பேட்' இணைக்கப்பட்ட, புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இதற்காக, மாவட்டம் தோறும், 'மொபைல்' ஓட்டுச்சாவடி வாகனங்கள், ஓட்டுச்சாவடி எல்லைகளுக்குள் சென்று, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.தலைமை தேர்தல் கமிஷன், 'விவி - பேட்' கருவி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த செப்., மாதம், மாவட்ட வாரியாக, 'விவி - பேட்' சரிபார்ப்பு பணி நடந்தது. திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த சரிபார்ப்பு பணி தொடர்பான விபரம், 'கண்ணால் காண்பது மெய்' என்ற தலைப்புடன், செப்., 8ல், 'தினமலர்' நாளிதழின், திருப்பூர் பக்கத்தில் செய்தியாக வெளியானது.செய்தியின் தலைப்பு, வாக்காளர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டதால், மாவட்ட தேர்தல் பிரிவினர், மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பினர். 'தினமலர்' செய்தி தலைப்பால் கவரப்பட்ட, அதிகாரிகள் குழு, அதே வாசகத்துடன், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வழிகாட்டிஉள்ளனர்.இதன்படி, 'கண்ணால் காண்பது மெய்' என்ற தலைப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், விழிப்புணர்வு போஸ்டர் தயாரித்து, தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-பிப்-201905:04:55 IST Report Abuse
Bhaskaran வாசகர்களை கவர்ந்திழுக்கும் தலைப்புகளை கொடுப்பதில் தினமலர் நாளிதழுக்கு இணை யாருமில்லை
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Qin Huang Dao,சீனா
13-பிப்-201915:29:00 IST Report Abuse
sivakumar காங்கி ஜெயித்தால் ஓட்டு பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்கிறது. பிஜேபி ஜெயித்தால் ஓட்டு பதிவு இயந்திரம் "" TAMPER "" செய்ய பட்டுள்ளது. அதனால் மோடி ஒயிக. வணக்கம் டூமிலன்ஸ்
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
13-பிப்-201912:50:17 IST Report Abuse
Gopi எந்தளவுக்கு முயற்சி எடுத்தாலும் குறை கூற ஆட்கள் இருக்கத்தான் செய்வர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X