பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நோ பால், சிக்சர்
சட்டசபையில் காரசாரம்

சென்னை: சட்டசபையில் 'சிக்சர், நோ பால்' என காரசாரமாக நடந்த விவாதத்தால் சிரிப்பலை எழுந்தது.

நோ பால்,சிக்சர்,சட்டசபை,காரசாரம்


சட்டசபையில் நேற்று தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி பேசுகையில் ''அ.தி.மு.க., உறுப்பினர் செம்மலை பேசியபோது, முதல்வர் தொடர்ந்து 'சிக்சர்' அடிப்பதாக கூறினார். எங்கள் தலைவர் ஸ்டாலின் போடும் பந்தில் ஆளும் கட்சி மீண்டும் வராது. 'கிளீன் போல்டு' ஆகி விடும்,'' என்றார்.

இதையடுத்து தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உடன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் எழுந்து ''அது, நோ பால் ஆகிவிடும்,'' எனக்கூற சபையில் சிரிப்பலை எழுந்தது.

அதைத் தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணி எழுந்து ''மைதானத்திற்கு வந்தால் தான் பந்து வீச முடியும். இன்னும் மைதானத்திற்கே அவர் வரவில்லை,'' எனக்கூற மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

கருணாஸ் பேச்சு துணை முதல்வர் பதில்


சட்டசபையில் நேற்று நடிகர் கருணாஸ் பேச்சுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது.

சட்டசபையில் நேற்று கருணாஸ் பேசுகையில், ''நாங்கள் பாசப் புலிகள். ஜெ., ஆணையிட்டால் பாயும் புலிகள் ஆவோம் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். நான் சமுதாயவாதி; அரசியல்வாதி இல்லை. என்னை ஜெயலலிதா எம்.எல்.ஏ., ஆக்கினார். அந்த விசுவாசத்திற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் அவரது அரசுக்கு ஆதரவு தருவேன்,'' என்றார்.

அதற்கு பதில் அளித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில்,

Advertisement

''உண்மையான புலி உள்ள கூண்டில் உங்களை அமர வைத்தால் பாசம் வருமா என்பது தெரியும்,'' எனக்கூற சபையில் சிரிப்பலை எழுந்தது.

'டிக் - டாக்' செயலி தமிழகத்தில் தடை?

'டிக் - டாக்' செயலி கலாசாரம் பண்பாட்டை சீரழிக்கிறது என்பது உண்மை தான். 'புளு வேல்' என்ற விளையாட்டின் 'சர்வர்' ரஷ்யாவில் இயங்கிய போதும் மத்திய அரசை வலியுறுத்தி அதை தடை செய்ய வைத்தோம். அதேபோல் மத்திய அரசை வலியுறுத்தி 'டிக் - டாக்' செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

- மணிகண்டன், தொழில்நுட்பத் துறை அமைச்சர்


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-201917:23:49 IST Report Abuse

ஆப்புஅவ்ளோதானா? மேட்ச் ஃபிக்சிங் ஒண்ணும் கிடையாதா? அப்போதானே துட்டு கைமாறும். யாரு ஜெயிக்கறாங்கறது முக்கியமில்லே...எவ்ளோ பணம் கைமாறுது...அதான் முக்கியம்.

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
13-பிப்-201910:20:07 IST Report Abuse

தமிழ்மைந்தன் தினகரன் என்ற சிங்கத்தை பார்த்து அஇஅதிமுக என்ற புலியே பயப்படும்போது திமுக என்ற எலி மட்டும் என்ன செய்ய முடியும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201908:54:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaஆடுகளத்தில் முடியாததை... சபையில் சொல்லிப்பார்க்கிறார்கள்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X