பதிவு செய்த நாள் :
நில மோசடி வழக்கு:
தாயுடன் வாத்ரா ஆஜர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நில மோசடி தொடர்பான வழக்கில், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, தன் தாயுடன் நேற்று ஆஜரானார்.

நில மோசடி வழக்கு: தாயுடன் வாத்ரா ஆஜர்


ராஜஸ்தானில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகானிரில், வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனம், 2015ல், மிகவும் குறைந்த விலையில், நிலங்களை வாங்கியுள்ளது.

பின், அதிக விலைக்கு, அந்த நிலம், ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, மூன்று முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், வாத்ரா ஆஜராகவில்லை.

'இந்த வழக்கில், வாத்ராவும் அவரது தாய், மவ்ரீன் வாத்ராவும், அமலாக்க துறைஅலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, ஜெயப்பூரில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா மற்றும் அவரது தாய் மவ்ரீன் நேற்று ஆஜராயினர். வாத்ராவின் மனைவியும், காங்., கிழக்கு உ.பி., பொதுச் செயலருமான, பிரியங்கா அவர்களுடன், அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

Advertisement

பிரியங்காவை வரவேற்று, அமலாக்கத் துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், காங்கிரஸ் கட்சியினர், பேனர்கள் அமைத்திருந்தனர். கட்சித் தொண்டர்களும் கூடியிருந்தனர். முன்னதாக, வெளிநாடுகளில் சொத்து வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, வாத்ராவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், சமீபத்தில், மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர்.

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
13-பிப்-201908:49:29 IST Report Abuse

tamilஅமலாக்கத்துறை அழைத்தால் எல்லோரும் போய் தான் ஆகவேண்டும், தவறு நடந்திருந்தால் விசாரணையை சந்தித்தே தான் ஆகவேண்டும்,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201908:49:14 IST Report Abuse

Srinivasan Kannaiyaஉப்பு தின்னா யாராக இருந்தாலும் தண்ணீர் குடிக்கவேண்டும்

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-பிப்-201906:31:04 IST Report Abuse

Darmavanஇந்த ஊரை கொள்ளை அடிக்கும் திருடர்களுக்கு/கொள்ளையர்களுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்குது

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X