பதிவு செய்த நாள் :
மத்திய அரசு மீது
சோனியா ஆவேசம்

புதுடில்லி: ''பொய், அச்சுறுத்தல், சகிக்க முடியாத வகையில் சத்தமாக பேசுதல் ஆகியவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தத்துவங்கள்,'' என, காங்., மூத்த தலைவர், சோனியா குற்றஞ்சாட்டி உள்ளார்.

Congress,Sonia Gandhi,காங்கிரஸ்,சோனியா,சோனியா காந்தி


டில்லியில் நேற்று, காங்., பார்லிமென்ட் கட்சி பொது குழு கூட்டத்தில், சோனியா பேசியதாவது: நாடு முழுவதும், சச்சரவுகளும், அச்சுறுத்தலுமாக காணப்படுகிறது. விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை, புதிய நம்பிக்கையுடனும், தீர்க்கமாகவும் சந்திப்போம்.

நம்பிக்கை:


ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், காங்.,கிற்கு கிடைத்த

வெற்றி, புதிய நம்பிக்கையை தந்துள்ளது. நம் எதிரிகள், தங்களை வெல்ல முடியாதவர்களாக தம்பட்டம் அடித்தனர். காங்., தலைவர், ராகுல், லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி, புதிய உத்வேகத்துடன் தேர்தலை சந்தித்தார்.

எதிரிகளின் கோட்டைகளாக கருதப்பட்ட மாநிலங்களில், காங்., சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற குடியரசின் ஜனநாயக அடித்தளங்களை தகர்க்கும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தத்துவங்கள்:


மத்திய அரசு அமைப்புகளில், அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர். எதிர்ப்பு குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. எல்லாவற்றிலும் முக்கியமான, பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. பொய், அச்சுறுத்தல், சகிக்க முடியாத வகையில் சத்தமாக பேசுதல் ஆகியவை, மத்திய அரசின் தத்துவங்களாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

'கட்சி பணிகளில் கவனம்'

''கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன்,'' என, உத்தர பிரதேச மாநில, கிழக்கு பகுதி, காங்., பொதுச்செயலர் பிரியங்கா கூறியுள்ளார். லக்னோவில், நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: என் கணவருக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். இதை நான் பொருட்படுத்துவது கிடையாது. மாறாக, கட்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். காங்., கட்சி பற்றியும், அது கட்டமைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் பல விஷயங்களை கற்று வருகிறேன். லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, பலதரப்பில் இருந்து கருத்துகளை பெற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
15-பிப்-201912:01:21 IST Report Abuse

Vaduvooraan 134 வருடங்களாக சுதேசி சிந்தனையை ஒங்க செய்து சுதந்திரம் பெற்றுத் தந்த ஒரு பழம் பெரும் அரசியல் கட்சி இன்று தனது தலைமை பொறுப்புக்கான ஆளுமையை கூட அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பது காலத்தின் கோலம் அல்லாது வேறென்ன? சச்சின் பைலட், மீனாக்ஷி நடராஜன், ஜோதிர் ஆதித்ய சிந்தியா என்று யாராவது இந்தியர்களை முன் நிறுத்தினால் காங்கிரஸ் பிழைக்குமோ என்னமோ? இந்த சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் அவரது நிழலான கணவர், கபில் சிபல், மணீஷ் திவாரி, அபிஷேக் சிங்க்வி, திக்விஜய், நம்ம ஊர் சிவகங்கை சீமான் இவர்களை முன் நிறுத்த முயன்றால் காங்கிரஸ் கரைந்து போவது உறுதி.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
15-பிப்-201914:05:12 IST Report Abuse

Darmavanஇந்த இந்தியா அப்பாவி ஒட்டர்களுக்கு இது தெரியவேண்டும்.இன்னும் வெள்ளை தோலிடம் அடிமை புத்தி போகவில்லை. ...

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
15-பிப்-201906:08:42 IST Report Abuse

meenakshisundaramஐயோ பாவம் தீர்ப்பு வந்தும் முன்பு பிரதமர் பதவியில் அமராமல் பயந்து போன கோழை,இபோதும் மறைவிலேயே காங் .யை இயக்குபவர்.

Rate this:
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
14-பிப்-201920:26:55 IST Report Abuse

Krishnamurthy Ramaswamyபல ஆயிரம் அப்பாவி இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது மெளனமாக அதை பார்த்து கொண்டு இருந்தது மத்திய காங்கிரசும் அன்றைய தமிழக கருணாவும். வைகோ அவர்களின் முந்தைய வீடீயோக்களை பாருங்கள் காங்கிரஸ் மற்றும் தி மு க வின் 'தமிழர் எதிர் நடவடிக்கைகள் பற்றி தெரியும் ' அவ்வளவு க்ளியராக பேசியிருக்கிறார் .அநத காங்கிரசும் தி மு க வும் இப்போது கை கோக்கின்றனர் தமிழர்களே விழித்தெழுங்கள்

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X