பதிவு செய்த நாள் :
டில்லியில் எதிர்க்கட்சியினர்
பிரமாண்ட பொதுக்கூட்டம்

புதுடில்லி: டில்லியில், எதிர்க்கட்சியினர் சார்பில், நேற்று பிரமாண்ட பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா, ''தே.ஜ., கூட்டணி ஆட்சியை அகற்ற, அனைத்து எதிர்கட்சிகளும் ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும்,'' என, பேசினார்.

டில்லி,எதிர்க்கட்சியினர்,பிரமாண்ட,பொதுக்கூட்டம்


டில்லியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில், எதிர்க்கட்சிகளின் பிரமாண்டபொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது: கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் வந்தனர். ஆனால், அவர்களது முயற்சியை முறியடித்தோம்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக, இதற்கு முன், எந்த ஒரு மத்திய அரசும் செய்யாத,

கீழ்த்தரமான நடவடிக்கையை, தற்போதைய, பா.ஜ., அரசு மேற்கொண்டுள்ளது. மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசை அகற்ற, அனைத்து எதிர்கட்சிகளும் ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும்.

ஹிந்தி படங்களில் வரும் வில்லன்களை பார்த்து, எல்லாரும் பயப்படுவது போல், நரேந்திர மோடியையும், அமித் ஷாவையும் பார்த்து, எல்லாரும் பயப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்,''சி.பி.ஐ., அமலாக்க துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகளையும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சீர்குலைத்து விட்டது,'' என்றார்.

இந்த கூட்டத்தில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,

Advertisement

தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உட்பட பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா பங்கேற்றார். அவர் மேடைக்கு வந்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் எழுந்து சென்று வரவேற்று, தன் அருகில் உள்ள நாற்காலியில், அவரை அமர வைத்தார். தி.மு.க., சார்பில், அந்த கட்சியின் ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி பங்கேற்றார்.

இடதுசாரி கட்சிகள் சார்பில், சீதாராம் யெச்சூரியும், ராஜாவும் பங்கேற்றனர். மம்தா பானர்ஜி மேடைக்கு வந்ததும், அவர்கள் இருவரும் எழுந்து சென்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
14-பிப்-201918:42:09 IST Report Abuse

Rajகோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்கசொன்னது உச்ச நீதி மன்றம்தானே? அதை ஏன் மம்தா முறி அடிக்க வேண்டும்?

Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201910:16:55 IST Report Abuse

Janarthananஉங்க கூட்டணி கொள்கை என்ன ?? மோடி எதிர்க்கனும், எதற்கு அவரு உங்க கொள்ளையை கேள்வி கேட்கிறார் என்று வேற ஒரு ஒன்றும் இல்லை என்று எங்களுக்கு தெரியும், அடுத்த முறை வந்தால் நாங்கள் காணாம போய் விடுவோம் என்று நாயுடு காரு மைக் இல் அலறல் சத்தம் எங்களுக்கு கேட்டது

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201908:58:57 IST Report Abuse

Srinivasan Kannaiyaமம்தா பானர்ஜி மேடைக்கு வந்ததும், அவர்கள் இருவரும் எழுந்து சென்றனர்.,,, இப்பவே ஓற்றுமை தெரிகிறது அல்லவா

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X