பதிவு செய்த நாள் :
பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுங்கள்
லோக்சபா கடைசி நாளில்
பிரதமர் மோடி கோரிக்கை

புதுடில்லி: தற்போதைய, 16வது லோக்சபாவின் கடைசி நாளான நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''வரும் லோக்சபா தேர்தலில், பெரும்பான்மை உள்ள அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார்.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி


தற்போதைய லோக்சபாவின் கடைசி கூட்டம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசின் ஐந்தாண்டு ஆட்சி காலம் முடியும் நிலையில், 'நிலநடுக்கம் ஏற்படும்' என, சிலர் சொல்லி கேள்விப்பட்டோம். ஆனால், எந்தவித நிலநடுக்கத்தையும் பார்லியில் இன்று காண முடியவில்லை.

லோக்சபாவில் விமானங்களை பறக்கவிட, அவர்கள் முயன்றனர். ஆனால், வலிமையான நம் ஜனநாயகத்தில், லோக்சபாவின் கண்ணியத்தால், இன்று நிலநடுக்கம் ஏற்படவில்லை. முதல் முறையாக லோக்சபா உறுப்பினராகி உள்ள எனக்கு, கட்டித் தழுவி கண்ணடிக்கும் சம்பவம் புதியதாக இருந்தது.

கட்டி தழுவுவதற்கும், தன்னை முன் நிறுத்திக் கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை முதல் முறையாக உணர்ந்தேன். தழுவியவர் கண்களில் துடுக்குத்தனம் தெரிந்தது. அந்த விளையாட்டை சபையில் எல்லாரும் பார்த்தீர்கள்.

மற்றொரு முறை, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நான் பேசுகையில்,

எழுந்த பலத்த சிரிப்புக்கு சாட்சியாக இருந்தேன். இதைப் போன்ற நடிப்பை, நடிகர்களால் கூட வெளிப்படுத்த முடியாது. இதில் இருந்து சிறந்த நடிப்பை, சினிமா துறையில் உள்ளோர் கற்க முடியும்.

சபாநாயகர் சுமித்ரா மஹாஜனும், லோக்சபா, காங்., தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், லோக்சபாவை நடத்தும் பணியை திறம்பட செய்தனர். நான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என வாழ்த்திய, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு நன்றி.

தே.ஜ., கூட்டணி ஆட்சியில், நாட்டின் தன்னம்பிக்கை உயர்ந்தது. உலக அரங்கில் பல்வேறு துறைகளில், நாட்டின் மதிப்பு அதிகரித்துள்ளது. மத்தியில் பெரும்பான்மை இல்லாத அரசுகள் ஆட்சி அமைத்ததால், இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தற்போது பெரும்பான்மை ஆட்சி அமைந்து, சிறப்பான நிர்வாகம் தந்ததால், உலக அரங்கில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள கவுரவத்திற்கு, நானோ, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜோ காரணம் அல்ல; மூன்று தலைமுறைகளுக்கு பின், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்ததே காரணம். எனவே, விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை உள்ள ஆட்சி அமையும் வகையில் ஓட்டு போடும்படி, மக்களை வேண்டுகிறேன்.

தற்போதைய, 16வது லோக்சபாவில், 219 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில், 203 மசோதாக்கள் நிறைவேறின; கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, லோக்சபா உறுப்பினர்கள் பெருமைப்பட வேண்டும்.

Advertisement

கறுப்புப் பணம், பினாமி சொத்துகள், திவால் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை தொடர்பான மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேறின. காலாவதியான, 1,400 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

லோக்சபாவின் இடையறாத முயற்சிகளால், உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக, நம் நாடு உருவெடுத்துள்ளது. தற்போதைய லோக்சபாவில், அதிகளவில் பெண், எம்.பி.,க்கள் இடம்பெற்றனர். லோக்சபா நடவடிக்கைகளில் ஆர்வமாக பங்கேற்ற அவர்களுக்கு வாழ்த்துகள்.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவிலும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகிய இரு பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய லோக்சபாவில், 17 கூட்டத் தொடர்களில், எட்டில், 100 சதவீத பணிகள் நடந்தன. ஒட்டுமொத்தமாக, 85 சதவீதம், பயனுள்ள பணிகள் நடந்துள்ளன.

இந்த லோக்சபா பதவிக் காலத்தில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, வங்கதேச எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. பார்லிமென்ட் உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது; பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
14-பிப்-201920:39:39 IST Report Abuse

T M S GOVINDARAJANமோடியின் ஆட்சியில் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு விளைபொருள்களை கடந்த 5 ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்த அரசு வேறு எந்த ஆட்சியாளர்களும் இதுபோல் வைத்திருந்தது இல்லை அதனால் எதிர்காலத்திலும் அவரே பிரதமர் அல்லக்கைகள் என்ன கூப்பாடு போட்டாலும் எனக்கு அத்தியாவசிய விலை வாசிப்பட்டியலுக்கு ஏதாவது கருத்து சொல்ல முடியுமா முடிந்தால் சொல்லுங்கள் அதற்கு விளக்கம் தருகிறேன் ஊழல் இல்லாத ஆட்சி மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவே மறுமுறையும் மோடிதான் பிரதமர் ஆவார் இது உறுதி மோடி ஆதரவாளர்கள் அனைவரும் நமது பிரதமர் வலுவாக ஆட்சி அமைப்பதற்கு இறைவனிடம் சில நிமிடங்கள் நமது பிரதமருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் வாழ்க ஜனநாயகம்.

Rate this:
SENTHIL - tirumalai,இந்தியா
14-பிப்-201919:22:55 IST Report Abuse

SENTHILஇந்தியாவின் ஒட்டுமொத்த அய்யோக்கிய திருடர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்ததே பெரிய சாதனை. நேர்மையானவர்களுக்கு பிடித்தமான ஆட்சியை கொடுத்த மோதிஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. மீண்டும் மோதிஜி வேண்டும் மோதிஜி... ஒரே வரியில் சொல்வதென்றால் "நேர்மையானவர்கள் மோதிக்கு பிஜேபி க்கு ஓட்டு போடுவார்கள். மற்றவர்கள் வழக்கம் போல திருடர்களுக்கு ஓட்டு போடுவார்கள்".... சிம்பிள் அவ்வளவுதான் .....

Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
14-பிப்-201918:21:46 IST Report Abuse

Bhagat Singh Dasanநேர்மையானவர்களுக்கு பிடித்தமான ஆட்சியை கொடுத்த மோடிஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. மீண்டும் மோடி வேண்டும் மோடி

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X