அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ்,சீட்

காங்கிரஸ் கட்சிக்கு, நாடு முழுவதும், மவுசு அதிகரித்திருப்பதால், 'கெத்து' காட்டும் விதமாக, தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில், 12 தொகுதிகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6; புதுச்சேரி, ஒன்று என, ஏழு தொகுதிகள் கொடுக்க தயாராக இருப்பதாக, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தரப்பில் பேசப்பட்டு உள்ளது. ஆனால், இரட்டை இலக்கத்தில், குறைந்தபட்சம், 10 சீட் பெறும் வகையில், தற்போது பேரம் தீவிரமடைந்துள்ளது.
தேர்தல் கமிஷன், மார்ச் முதல் வாரத்தில், லோக்சபா தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளது. தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், அணிசேரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தயார்:


தி.மு.க., தலைமையில், காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை, கூட்டணி சேர விரும்புகின்றன.
அ.ம.மு.க., - தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், த.மா.கா., - ச.ம.க., மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள், எந்த அணியில் இடம்பெற போகின்றன; அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை உருவாக்க போகின்றனவா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் ரஜினியின், மக்கள் மன்றமும், தேர்தலில் நிற்கப் போகிறதா அல்லது எதாவது, ஒரு அணிக்கு ஆதரவு தரப் போகிறதா என்ற, கேள்வியும் எழுந்துள்ளது.
ராகு - கேது பெயர்ச்சி, நேற்று முடிந்துள்ளதால், விரைவில், கூட்டணி முடிவை வெளியிட, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமைகள் தயாராகி வருகின்றன. துணை முதல்வர், பன்னீர்செல்வம்

உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு, இரட்டை இலை சின்னம் தீர்ப்பு, 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு போன்றவை, ஓரிரு வாரங்களில் வெளிவரலாம் என தெரிகிறது.
அதன்பின், அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என்பதால், அணிகளிலும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில், திரைமறை தொகுதி பங்கீடு பேச்சு நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தி.மு.க., அணியில், தொகுதி பங்கீடு பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில், காங்கிரசுக்கு, 16 தொகுதிகள் தரப்பட்டன. அவற்றில், எட்டு தொகுதிகளில், காங்., வெற்றி பெற்றது.

4.32 சதவீதம்:


வரும் லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம், 12; அதிகபட்சம், 16 தொகுதிகள் கேட்க, காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஆனால், ஏழுக்கு மேல் ஒதுக்க, தி.மு.க., விரும்பவில்லை.
கடந்த, 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தனித்து

போட்டியிட்டு, 4.32 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றது. அதன் பின், காங்கிரஸ் உடைந்து, வாசன் தலைமையில், த.மா.கா., உருவானது. 2014ல் போட்டியிட்ட, 39 காங்கிரஸ் வேட்பாளர்களில், 13 பேர், த.மா.கா.,வில் உள்ளனர்.
எனவே, காங்கிரஸ் ஓட்டு பலத்தின் அடிப்படையில், தமிழகத்தில், ஆறு; புதுச்சேரி ஒன்று என, ஏழு தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஆனால், ஒற்றை இலக்கத்தில், தொகுதிகளை பெற, காங்கிரஸ் விரும்பவில்லை. தி.மு.க.,விடம், 12 தொகுதிகளை வாங்கினால் தான், வரும் சட்டசபை தேர்தலில், 72 சட்டசபை தொகுதிகளை பெற முடியும். வெறும், ஏழு லோக்சபா தொகுதிகள் வாங்கினால், சட்டசபை தேர்தலில், 42 தான் கிடைக்கும் என்பதால், இந்த தேர்தலில், கூடுதல் தொகுதிகளை பெற, காங்கிரஸ் விரும்புகிறது.
சமீபத்தில் நடந்த, ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. அதனால், அக்கட்சிக்கு மவுசு கூடியுள்ளது. மேலும், ராகுலுக்கு பக்கபலமாக, பிரியங்காவையும் களமிறக்கியுள்ளதால், தேர்தலில், அவரது

பிரசாரம், காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு கை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கக்கூடாது:


எனவே, தி.மு.க., தரும் குறைந்த தொகுதிகளை ஏற்கக் கூடாது என்பதில், காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இதுகுறித்து, காங்., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில், இரட்டை இலக்கத்தில், தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். புதுச்சேரி உட்பட, 12 தொகுதிகளை கேட்கிறோம். ஏழு தொகுதிகள் என்றால், ஏற்க மாட்டோம். குறைந்தபட்சம், 10 தொகுதிகள் என, இரட்டை இலக்கத்தில் ஒதுக்கீடு செய்தால், கூட்டணியில் நீடிப்போம். இல்லையென்றால், கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்யும்படி, டில்லி மேலிடத்தை வலியுறுத்துவோம்.

ரஜினி ஆதரவு:


கடந்த, 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக, அ.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததால், மூப்பனார் தலைமையில், த.மா.கா., உதயமானது. மூப்பனாரோ, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ரஜினி ஆதரவுடன், அந்த கூட்டணிக்கு, மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தார். அதன் காரணமாகவே, கருணாநிதி முதல்வரானார்.
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்காமல், ரஜினி ஆதரவுடன் தனித்து போட்டியிட்டிருந்தால், மூப்பனார், முதல்வர் ஆகியிருப்பார். எனவே, அரசியலில், சாதகமான நேரத்தில், சரியான முடிவு எடுக்க வேண்டும். அதேபோன்ற சாதகமான சூழல், தேசிய அளவில், காங்கிரசுக்கு உள்ளது. பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுக்களை அறுவடை செய்யக் கூடிய, ஒரே கட்சியாக, காங்கிரசை தான் மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-பிப்-201906:06:20 IST Report Abuse

meenakshisundaramதிமுகவுக்கு மக்கள் ஏற்கனவே மெரினாவில் இடம் கொடுத்தாச்சு.இனிமேல் கடைசி ஆணியை கையிலே வச்சுக்கிட்டுருக்காங்க .சொல்லி முடிஞ்சதும் அடிச்சிருவாங்க.

Rate this:
Vinay - Toronto,கனடா
15-பிப்-201900:55:06 IST Report Abuse

Vinayதமிழ்நாட்டை பொறுத்த வரை காங்கிரஸ், பிஜேபி ரெண்டும் ஒண்ணும்தான், இவங்க போட்டியிடற தொகுதியில் தோற்க வேண்டும் , இவங்க MP ஆகி நமக்கே ஆப்பு அடிப்பானுங்க.....

Rate this:
Jayasankar. v - Mumbai,இந்தியா
14-பிப்-201919:39:48 IST Report Abuse

Jayasankar. vஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் ஒரு வேளை உருபட்டாலும் உருபடலாம். ஆனால் காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கின்ற கட்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவுவது உறுதி. 2017 உத்தர பிரதேச சட்ட மன்ற தேர்தலில் ப்ரியங்கா வாத்ரா அமேதி மற்றும் ராய்பரேலி லோக் சபா தொகுதிக்குள் அடங்கிய சட்ட மன்ற தேர்தலில் அதி தீவிரமாக பிரச்சாரம் செய்து அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களின் டெபாசிட் இழக்கச் செய்தது ப்ரியங்காவின் முக்கிய சாதனை என்று கூறலாம். சுருங்கச் சொல்லின் தி மு க - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி என்பது பிஜேபி-AIADMK விற்கு வெற்றியை அசாதாரணமாக தேடித்தரும் என்பது திண்ணம். தி மு க - காங்கிரஸ் தேர்தல் கூட்டணிக்கு கிடைக்கப்போவது " நமக்கு மூன்று நாமமே" தான். அது தமிழ் நாட்டின் அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் மிகவும் நல்லது. ஸுபம்

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X