அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் : அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Added : பிப் 13, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 தமிழகத்தில் குடிநீர் பஞ்சம்  :  அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: ''தமிழகம் முழுவதும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி தெரிவித்தார்.சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: தமிழகத்தில், குடிநீர் பஞ்சம் கடுமையாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளின் நீர்மட்டம், படு பாதாளத்திற்கு போய் விட்டது. தமிழகத்தில் உள்ள, 33 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.சட்டசபையில், 110 விதியின் கீழ், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றின் நிலை குறித்து, அரசு, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோடை காலத்தில், மக்களுக்கு ஏற்படப்போகும் அவதியை புரிந்து, அறிவித்த குடிநீர் திட்டங்களை, உடனடியாக செயல்படுத்தும் முயற்சியில், அரசு ஈடுபட வேண்டும்.அமைச்சர் வேலுமணி: கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கிராம வாரியாக, செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், 30 ஆயிரத்து, 951 வறட்சி நிவாரணப் பணிகள், 449 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.சென்னையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல்இருக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 2,782 வறட்சி நிவாரணப் பணிகள், 104 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வறட்சியை எதிர்நோக்கும், 86 பேரூராட்சிகளில், 232 பணிகள், 25 கோடி ரூபாயில் மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊரகம் மற்றும் நகர்ப் பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க, அரசு சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
19-பிப்-201911:44:34 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மாறிமாறி திமுக அண்ட் அதிமுகன்னு கோடீஸ்வராலை உண்டாக்கியாச்சு இப்போதென்ன பொலம்பலாம் னேன். குளிக்க குடிக்க நீர் தேவை வசதி இருந்தால் லாறிலே வரும் இல்லேன்னா குடம் தூக்கிண்டு தெருவெல்லாம் ஊர்கோலம் தான் எல்லா நீர்நிலைகளையும் தூர்த்து வீடுகளோ வந்தாச்சு பேசாதீங்க எவனும்.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Qin Huang Dao,சீனா
16-பிப்-201913:46:31 IST Report Abuse
sivakumar தண்ணீர் பஞ்சத்தை பற்றி இவர் பேச அருகதை இல்லை. இவர்கள் ஆட்சியின் பொது உ . பி க்கள் எத்தனை நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்பதை இவரே நன்கு அறிவார். இதில் ஊருக்கு உபதேசம் . இதோ பின் வரும் செய்தியை படியுங்கள், உண்மையை உணருங்கள். '''' இந்நிலையில், காஞ்சிபுரத்தில், கருணாநிதி சிலையை திறக்க வரும், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுஉள்ள கல்வெட்டையும், இன்று திறக்கவுள்ளார்.நீர் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதாக, அ.தி.மு.க., அரசு மீது, தி.மு.க., குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், மழை நீர் செல்லும் கால்வாயை துார்த்து, கல்வெட்டு கட்டியிருப்பதும், அதை, அக்கட்சித் தலைவர், ஸ்டாலின் திறப்பதும், எந்த வகையில் நியாயம் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். """
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201916:13:14 IST Report Abuse
மனிதன் இதெல்லாம் எப்பவோ அன்புமணி சொல்லிட்டாரு நீங்க இன்னும் அப்டேட் ஆகணும் தல ஐந்து வருடம் பின்னாடியே நின்றாள் எப்பூடி...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X