பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

Added : பிப் 14, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள, 55 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து வருகிறது. இதன்படி, சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் எஸ்.ஐ.,க்கள் குறித்து, தகவல் சேகரிக்கவும், அவர்களிடம் தன்விருப்ப பணி இடமாற்றம், பிற மாவட்டங்களுக்கு செல்ல, விருப்ப மனு, ஓரிரு தினங்களுக்கு முன் பெறப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், 36 போலீஸ் ஸ்டேஷன்கள், நான்கு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில், 55 எஸ்.ஐ.,க்கள், சொந்த மாவட்டத்தில் பணி புரிவது தெரிய வந்துள்ளது. இவர்கள். பிற மாவட்டங்களில் பணிபுரிய, தன் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும், விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பொருளாதார குற்றப்பிரிவு, வணிக குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில், பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் குறித்து, எவ்வித தகவலும் தெரியவில்லை. பிற பிரிவுகளில் பணியாற்றும், எஸ்.ஐ.,க்களுக்கு பணியிட மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X