பொது செய்தி

தமிழ்நாடு

தார்ச்சாலையை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

Added : பிப் 14, 2019
Advertisement

கொடுமுடி: நொய்யல் செல்லும் தார்ச்சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடுமுடி யூனியன், ஆவுடையார்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமநாயக்கன் பாளையத்தில் இருந்து, நொய்யல் செல்லும் சாலை கடந்த, ஆறு வருடங்களுக்கு முன், அமைக்கப்பட்டு பயன் பாட்டில் இருந்து வருகிறது. பராமரிப்பின்றி, தார்ச்சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வருடங்களை கடந்த நிலையில், தார்ச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, அபாய நிலையில் காட்சி அளித்து வருகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவது வாடிக்கையாக உள்ளது. நொய்யல் செல்லும் முக்கியமான சாலையாக இருப்பதால், ஆவுடையார்பாறை ஊராட்சி அதிகாரிகள், தார்ச்சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X