சொந்த கட்டடத்தில் தபால் ஆபீஸ் கட்டுவதற்கு மக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த கட்டடத்தில் தபால் ஆபீஸ் கட்டுவதற்கு மக்கள் கோரிக்கை

Added : பிப் 14, 2019
Advertisement

கொடுமுடி: சிவகிரி இளங்கோ தெருவில், கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அஞ்சலகங்கள் கருக்கம்பாளையம், மின்னப்பாளையம், தாண்டாம்பாளையம், கந்தசாமி பாளையம், அம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. இளங்கோ தெருவில் உள்ள தபால் அலுவலகம், தாழ்வான பகுதியில் உள்ளதால், மழைக்காலங்களில் மூட வேண்டிய நிலை உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தபால் அலுவலகத்துக்கென ஒதுக்கப்பட்ட, 25 சென்ட் நிலத்தில், புதிய தபால் அலுவலகம் கட்ட, மாவட்ட தலைமை தபால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சிவகிரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X