அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : பிப் 14, 2019
Advertisement

கோவில் வளாகத்தில் சுகாதார சீர்கேடு: புன்செய்புளியம்பட்டி, அவினாசி சாலை, கோவில்புதூரில், கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. விஷேச நாட்களில், பக்தர்கள் பாக்கு மட்டை தட்டுகளில், அன்னதானம் வழங்குகின்றனர். குப்பை தொட்டி வைக்காததால், பாக்கு தட்டுகளை, ஆங்காங்கே வீசுகின்றனர். முறையாக அகற்றாததால், கோவில் வளாகத்தில், சிதறிக் கிடப்பதோடு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை தொட்டி வைத்து, முறையாக சுத்தம் செய்ய, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழுதடைந்த பஞ்., அலுவலக கட்டடம்: மொடக்குறிச்சி யூனியன், கணபதி பாளையம் பஞ்., அலுவலக கட்டடம் தற்போது வலுவின்றி காணப்படுகிறது. சிமென்ட் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, உள்ளது. பொதுமக்களும் அச்சத்துடனே பஞ்., அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். சேதமான இந்த பஞ்., அலுவலக கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்கம்பத்தில் விளம்பர பேனர்: மின்கம்பங்களின் விளம்பர பேனர்களை கட்டுவது தவறு என, மின்வாரியம் தொடந்து அறிவுறுத்தி வருகிறது. பலர் அதை மதிப்பதில்லை. பல இடங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் உள்ளன. திண்டல் மலையின் எதிரில், பெருந்துறை சாலையில் உள்ள, மின்கம்பத்தில், பலர் விளப்பர பேனர்ளை கட்டி உள்ளனர். மின்வாரிய பணியாளர்கள், அவசரத்துக்கு கம்பத்தில் ஏற முடியாது. அதிகாரிகள் இதை கவனித்து, பேனர் கட்டுவோர் மீது, நடடிக்கை எடுக்க வேண்டும்.

பழுதடைந்த பாலம்; அச்சத்தில் மக்கள்: கோபி அருகே செங்கலரை கிராமத்தில், நகராட்சிக்கு சொந்தமான தலைமை நீரேற்று நிலையம் உள்ளது. இதற்கு செல்லும் வழியில், தடப்பள்ளி வாய்க்காலை கடக்க, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, பாலம் சேதமடைந்துள்ளது. பாலத்தின் நடுவே ஓட்டை விழுந்துள்ளது. தற்போது சாகுபடி பணி நடப்பதால், இவ்வழியே இரவு நேரங்களில் செல்வோர், அச்சத்துடன் பாலத்தை கடக்கின்றனர். அது குறித்து எச்சரிக்கை பலகை வைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: கொடுமுடி யூனியன், கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பனப்பாளையம் பகுதியிலிருந்து, கொம்பனைப்புதூர் செல்லும் சாலையோரத்தில், காவிரி குடிநீர் குழாய் பதித்துள்ளனர். இந்த குழாயில், கடந்த, ஒரு மாதத்துக்கு முன், உடைப்பு ஏற்பட்டது. இதை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தற்போது வரை சரிசெய்யாமல் உள்ளனர். இதனால், குடிநீர் கசிந்து சாலையில் வீணாகி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X