ஈரோடு: நீரேற்று நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடப்பதால், ஈரோட்டில், இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, வெண்டிபாளையம் நீரேற்று நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடப்பதால், மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 34, 37, 46 மற்றும், 48 ஆகிய நான்கு வார்டுகளில், இன்றும், நாளையும், இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.