பொது செய்தி

தமிழ்நாடு

'பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம்'

Added : பிப் 14, 2019
Advertisement

ஈரோடு: ''பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில், மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்க உள்ளது,'' என, ஊழியர் சங்க, அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பா கூறினார்.
ஈரோட்டில் நடந்த நிருபர்கள் சந்திப்பின்போது, அவர் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவில், வரும், 18 முதல், 20 வரை, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில், மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க உள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடாபோன் போன்றவைகளில் உள்ள, 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய அரசிடம், அரசிற்கு சொந்தமான நேஷனல் வங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளனர். ஏர்டெல், ஒரு லட்சத்து, 13 ஆயிரம் கோடி ரூபாயும், வோடபோன், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் கோடி ரூபாயும், ஜியோ முகேஷ் அம்பானி, ஒரு லட்சத்து, 2,500 கோடி ரூபாயும் கடன் வாங்கி உள்ளனர். பொதுத்துறை நிறுவன பங்குகள், தொடர்ந்து தனியாருக்கு விற்கப்படுகிறது. கடந்த, 2004 முதல், 2014 வரை, மத்திய அரசு பல பொதுத்துறை பங்குகளை விற்றுள்ளது. ஓய்வூதிய மாற்றம் விரைவில் செய்யப்படும் என, மத்திய அமைச்சர் தெரிவித்தும், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்களுக்கு, மூன்று கால சம்பளம் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிவேலு, செயலாளர் மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X