பொது செய்தி

தமிழ்நாடு

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: நாய்க்கும், ஆட்டுக்கும் திருமணம்

Added : பிப் 14, 2019
Advertisement

கோபிசெட்டிபாளையம்: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர், நாய்க்கும், வெள்ளாட்டுக்கும், திருமணம் நடத்தினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கொடிவேரி பிரிவில், இந்து முன்னணியினர், நேற்று மாலை, 5:45 மணிக்கு குவிந்தனர். நிர்வாகிகள், செல்வராஜ், சீனிவாசன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண் நாயை மணமகனாகவும், வெள்ளாட்டை மணமகளாகவும் ஏற்பாடு செய்தனர். கொடிவேரி பிரிவில் ஊர்வலமாக சென்றனர். பின், மோதிரம் மாற்றி, நாய்க்கும், வெள்ளாட்டுக்கும் திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து, காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X