மொடக்குறிச்சி புதிய தாலுகா அலுவலகம் விரைவில் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொடக்குறிச்சி புதிய தாலுகா அலுவலகம் விரைவில் திறப்பு

Added : பிப் 14, 2019
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி புதிய தாலுகா அலுவலக கட்டட திறப்பு விழா, ஓரிரு மாதத்தில் நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், யூனியனாக செயல்பட்ட மொடக்குறிச்சி, கடந்த, 2016ல், தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. தாலுகா அலுவலகத்துக்கு, சொந்த கட்டடம் இல்லாமல், மொடக்குறிச்சியில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக கட்டடத்துக்கு, இடம் தேர்வு செய்து, அதற்கு, தமிழக அரசு, இரண்டு கோடியே, 62 லட்சம் ரூபாய், நிதி ஒதுக்கியது. கடந்தாண்டு மார்ச்சில், பணிகள் துவங்கின. மொடக்குறிச்சி யூனியன் அருகே, முத்தூர் சாலையில், புதிய தாலுகா அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், தாசில்தார் அலுவலகம், வரவேற்பறை, வாகன நிறுத்தம், மண்டல தாசில்தார் அலுவலகம் என, அலுவலர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு, கம்பீரமாக தாலுகா அலுவலக கட்டடம் உருவெடுத்துள்ளது. தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவடைந்து ஒயரிங், பெயின்டிங், அலுவலக தளவாட பொருட்கள், உபகரணங்கள், வளைவு அமைப்பு, உள்ளிட்ட பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. நடப்பு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, ஓரிரு மாதத்தில், புதிய தாலுகா அலுவலக கட்டடம் திறக்க, வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X