ஈரோடு: மேற்கு வங்காளம், கோல்கட்டாவில், 45வது தேசிய சிறுவர், சிறுமியர், 20 வயதுக்குட்பட்டோர் கபடி சாம்பியன் ஷிப் போட்டி, இன்று முதல், வரும், 18 வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது. இதில், தமிழ்நாடு அணியின் சார்பாக விளையாட, கோபி, பி.கே.ஆர்., மகளிர் கல்லூரியில், பயிற்சி முகாம் கடந்த, 2 முதல், 11 வரை, 10 நாட்கள் நடந்தன. 12 மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். திண்டுக்கல், சவுந்தர்யா, மேகலட்சுமி, ஈரோடு, சோனி, தாமரை, வேலூர், சத்தியவாணி, சாய் மயிலாடுதுறை, சவுந்தர்யா, நாமக்கல், தீபா, கரூர் மீனா, கோவை, சந்தியா, மதுரை, சுமித்ரா, கரூர், நந்தினி, திருப்பூர், நந்தினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை, கோபி பி.கே.ஆர்., கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெகதாலட்சுமணன், முதல்வர் முனைவர் மைதிலி, மாவட்ட கபடி செயலாளர் சத்யன் மற்றும் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஜமுனாமணி, பயிற்சியாளர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர். தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராக, தேசிய நடுவர் பழனிச்சாமி கோபி, மேனேஜர் தண்டபாணி திருப்பூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.