சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர், தந்தை அடுத்தடுத்து இறப்பால் மனமுடைந்த பெண் மகனுடன் தற்கொலை

Added : பிப் 14, 2019
Advertisement

சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை காட்டூர் சாலையை சேர்ந்தவர் துரைகந்தசாமி. இவரது மனைவி மகேஸ்வரி, 40. இவர்களது மகன் ஹரிபிரசாந்த், 15, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தான். துரைகந்தசாமி உடல்நிலை பாதித்து, கடந்தாண்டு இறந்தார். மகேஸ்வரி தனது மகனுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன், மகேஸ்வரியின் தந்தை ராமசாமி உடல்நலக்குறைவால் திடீரென இறந்தார். கணவனை தொடர்ந்து, தந்தையும் இறந்ததால் மகேஸ்வரி மனமுடைந்தார். கணவர் இறந்து ஓராண்டு ஆகும் நிலையில், மகேஸ்வரி நேற்று முன்தினம் மாலை, தனது மகனுக்கு செல்பாஸ் மாத்திரையை கொடுத்துவிட்டு, அவரும் குடித்துள்ளார். வலியால் அலறிய மகேஸ்வரியையும், ஹரிபிரசாந்தையும் உடனடியாக, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், இருவரும் இரவில் இறந்தனர். சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X