பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பலமான கூட்டணி அமையும்: பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி: வானதி

Added : பிப் 14, 2019
Advertisement

பவானி: ''தமிழகத்தில், பலமான வெற்றி கூட்டணி அமைத்து, பா.ஜ., வெற்றி பெறும்,'' என, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் அவர் கூறியதாவது: நாளை (இன்று) காலை, 11:00 மணியளவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, ஈரோடு வருகிறார். அவர், நெசவாளர் சந்திப்பு, பா.ஜ., சக்தி கேந்திர நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த, 10ல், பிரதமர் மோடி வருகை, அமித்ஷா வருகை ஆகியவற்றால், கொங்கு மண்டல, பா.ஜ., தொண்டர்கள் மிகுந்த உத்வேகத்துடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, வைகோ தன் மரியாதையை இழந்து வருகிறார். ஏனென்றால், தென் தமிழகத்தில் பிறந்த இவர், தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பூமி பூஜையில் பங்கேற்க வந்த பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவது நியாயமா. அதேபோல், திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்ட வந்த போதும் இதே தான் நடந்தது. அவருக்கு இலங்கை, காவிரி, முல்லைபெரியாறு போன்ற எந்த பிரச்னையும் எடுபடவில்லை. தற்போது, கறுப்பு கொடி பிரச்னையை கையில் எடுத்துள்ளார். அரசியலில் ஆளுமை கொண்ட ஒரு தலைவர், தற்போது ஒரு குழு தலைவராக மாறியுள்ளார். கஜா புயலின் போது, மத்திய அமைச்சர் முகாமிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டார். அதேபோல், மாநில தலைவர் அங்கேயே தங்கி மருத்துவ முகாம் நடத்தி மக்களுடன் பணியாற்றினார். தமிழகத்தை, பா.ஜ., என்றுமே புறக்கணித்தது இல்லை. தமிழகத்தில் பலமான வெற்றி கூட்டணி அமைத்து, பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X