அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : பிப் 14, 2019
Advertisement

கழிவறைக்கு பூட்டு; சுகாதாரத்துக்கு வேட்டு: அரூர் அடுத்த, வேடகட்டமடுவு பஞ்., டி.ஆண்டியூரில், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த, 2011-12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக, பராமரிக்க பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், தற்போது, பயன்பாடின்றி உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். எனவே, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்சி பொருளான குடிநீர் தொட்டி: தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டி பஞ்., ராமன் நகரில், கடந்த, 2015-2016ல், ஒரு லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில், சிறுமின் விசை பம்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில், ஒரு சில மாதங்கள் மட்டும் தண்ணீர் வந்த நிலையில், மின்மோட்டார் பழுதால், தண்ணீர் வரத்தில்லாமல் உள்ளது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். மின்மோட்டாரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூட்டிய கட்டடம்; மகளிர் திண்டாட்டம்: தர்மபுரி அடுத்த, கோணங்கிநாயக்கனஹள்ளியில், கடந்த, 2014-2015ல், புதிய மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டது. இங்கு, தங்களது சங்க வரவு, செலவுகளை பார்க்கவும், ஆலோசனை செய்யவும், மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டடத்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த, ஓராண்டுக்கு முன், கட்டடத்தை அதிகாரிகள் பூட்டினர். சாலை ஓரங்களில், வரவு, செலவு கணக்குகளை பார்க்க வேண்டிய நிலையில், மகளிர் சுயஉதவிக்குழுவினர் தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X