பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

Added : பிப் 14, 2019
Advertisement

தர்மபுரி: 'அரசு ஐ.டி.ஐ.,ல், ஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என்று, ஐ.டி.ஐ., முதல்வர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அடுத்த, கடகத்தூர் அரசு ஐ.டி.ஐ.,ல், கம்பியாள் தொழிற்பிரிவு காலியாக உள்ளது. இங்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில், ஒப்பந்த முறையில், பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவில், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாண்டு, கம்பியாள் தொழில் பிரிவில், NTC, NAC சான்று பெற்றிருக்க வேண்டும். NTC சான்றிதழ் பெற்றவர்கள், மூன்றாண்டு, NAC சான்று பெற்றவர்கள், இரண்டாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கடந்த, ஜன.,1ல், 18 வயது பூர்த்தியடைந்தும், 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியானவர்கள், சுயவிபரம், பாஸ்போர்ட் அளவு போட்டோ, கல்வி, ஜாதி, வயது சான்றிதழ், நகலும், சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் ஒட்டப்பட்ட கவருடன், மொபைல் எண்ணை எழுதி, வரும், 27ல் மாலை, 5:00 மணிக்குள், 'முதல்வர், அரசு ஐ.டி.ஐ., கடகத்தூர், செல்லியம்பட்டி அஞ்சல், தர்மபுரி மாவட்டம்' என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X