அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : பிப் 14, 2019
Advertisement

மோசமான சாலை சீரமைக்கப்படுமா? ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், ஸ்ரீராம் நகர் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு, சானசந்திரம் பிரிவு சாலைக்கு எதிரே, ராயக்கோட்டை சாலையில் இருந்து பிரிந்து மண் சாலை செல்கிறது. இச்சாலையில், பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள், வாகன டயர்களை பதம் பார்க்கின்றன. இந்த சாலையை கடப்பதற்குள், பிரம்ம மலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாடு படுகின்றனர். பலமுறை புகாரளித்தும், சாலை செப்பனிடப்படவில்லை. தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
சாலையோர இடைவெளியால் பீதி: கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கடந்தாண்டு பெய்த மழையால், சாலை சேதமடைந்து, குண்டும்குழியுமாக மாறியது. இதனால், கடந்த மாதம் அவதானப்பட்டி முதல், திம்மாபுரம் வரை, புதிய சாலை அமைத்தனர். சர்வீஸ் சாலையையொட்டி, தடுப்புச்சுவர் வரை, சாலை அமைக்காமல், அரையடி இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் டூவீலர் ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி கீழே விழும் அபாயமுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X