பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையால் தவிப்பு: பொதுமக்கள் கொந்தளிப்பு

Added : பிப் 14, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி நகராட்சி, ஒன்றாவது வார்டில், கடந்த, ஆறு மாதங்களாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி கோட்டை, ஒன்றாவது வார்டில் உள்ள அப்பண்ணன்தெரு, சைஜாமுதீன் தெரு உள்ளிட்ட, மூன்று தெருக்களில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள், மூன்று இடங்களில் அமைக்கப்பட்ட போர்வெல் குழாயில், தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், இரண்டு போர்வெல் மோட்டார் பழுதானது. ஒரு போர்வெல் பம்பு வழியாக சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதில், தண்ணீர் வருவதும் நின்று விட்டது. ஒரே நேரத்தில், மூன்று போர்வெல் பம்பிலும் தண்ணீர் வராததால், மக்கள் சிரமமடைகின்றனர். புகார்படி, எம்.எல்.ஏ., செங்குட்டுவன், நகராட்சி ஆணையாளர் ரமேஷ் ஆகியோர், கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், இங்கு ஆய்வு செய்தனர். ஆனால், இன்று வரை, போர்வெல் மோட்டார் பழுதை நீக்கி, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 'போர்க்கால அடிப்படையில், மோட்டார் பழுதை நீக்கி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X