100 நாள் திட்ட பணி கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் திட்ட பணி கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

Added : பிப் 14, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: 'தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலை வழங்க வேண்டும்' எனக்கோரி, மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய துணைத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தனர். மாநில துணை தலைவர் பாரதிஅண்ணா கோரிக்கை குறித்து பேசினார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். காலை முதல், மாலை, 4:00 மணி வரை, முழு ஊதியம் வழங்க வேண்டும். 100 நாட்களுக்கு, குறைவாக வேலை வழங்காத நாட்களுக்கு, பாதி ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், வேலை அட்டை வழங்க வேண்டும், என, கோஷங்கள் எழுப்பினர். இதேபோல், ஊத்தங்கரையில், மாநில பொதுச்செயலாளர் நம்பி ராஜ், கெலமங்கலத்தில், மாநில செயலாளர் ஜீவா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, நிர்வாகிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X