மாதிரி இயந்திரத்தில் ஓட்டளித்த மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாதிரி இயந்திரத்தில் ஓட்டளித்த மக்கள்

Added : பிப் 14, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளித்து பொதுமக்கள் சரிபார்த்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, மக்கள் பயன்படுத்தி, சரிபார்க்கும் திட்டத்தை கலெக்டர் பிரபாகர், கடந்த, 9ல் துவக்கி வைத்தார். ஒரு சட்டசபை தொகுதிக்கு, ஆறு வாகனங்கள் வீதம், 42 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம், ஓட்டுப்பதிவு குறித்து, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பயிற்சி பெற்ற அலுவலர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இதில், யாருக்கு ஓட்டளித்தோம் என்று காட்டும் இயந்திரமும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று, கிருஷ்ணகிரி கோட்டை நகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளியில், மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது. இதில், தி.மு.க., நகர செயலாளர் நவாப், தன் ஓட்டை பதிவு செய்து சரி பார்த்தார். ஓட்டுக்களை இயந்திரத்தில் பதிவு செய்த மக்களின் சந்தேகங்களுக்கு, அலுவலர்கள் விளக்கமளித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பரிதா, தலைமை ஆசிரியர் நிசார்அகமத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X