போச்சம்பள்ளி: கல்லூரி மாணவியை கடத்திய, வாலிபருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் மூன்று பேர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மத்தூர் மந்திப்பட்டியை சேர்ந்த, 17 வயது பெண், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், மத்தூர் அடுத்த, தருமன்தோப்பைச் சேர்ந்த ரஞ்சித், 22, என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். புகார்படி, மைனர் பெண்ணை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்த மத்தூர் போலீசார், இருவரையும் தேடி வந்தனர். போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்த ரஞ்சித்தை, போக்சோவில் கைது செய்து, மாணவியை போலீசார் மீட்டனர். கடத்தலுக்கு உதவிய, திருப்பூரைச் சேர்ந்த ரஞ்சித்தின் உறவினர்கள் விக்னேஷ், 35, இவரது மனைவி செம்பருத்தி, 32, உதயகுமார், 35, ஆகியோர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.