பொது செய்தி

இந்தியா

மாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி : இந்த ஆண்டு மாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய இந்திய நகரங்களாக பாட்னா, கான்பூர், வாரணாசி உள்ளன.






கான்பூர் ஐஐடி.,யும், சக்தி பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இந்தியாவில் மாசுபாடு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில், காற்று மாசு பாட்டில் தலைநகர் டில்லியை மிஞ்சும் அளவிற்கு மாசுபாடுடைய நகரங்களாக பாட்னா, கான்பூர், வாரணாசி ஆகியன உள்ளது தெரிய வந்துள்ளது. அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 31 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நகரங்களில் 170 பிஎம் (micrograms per cubic metre) ஆக மாசுபாடு துகள்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.





மாசுபாடு நிறைந்த நகரங்களின் பட்டியலில் தற்போது டில்லி 4 வது இடத்திலேயே உள்ளது. 5 வது இடத்தில் ஜெய்பூர் உள்ளது. காற்று மாசுபாட்டில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் மாசுபாடு குறைவாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, வாகன புகை, மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் தூசுகள் உள்ளிட்டவைகள் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.




மாசுபாடு, பருவநிலை மாற்றம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் காற்று மாசுபாடு குறித்து இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என சர்வதேச நிபுணர்கள் சிலரும் அறிவுரை வழங்கி உள்ளனர். மக்கள்தொகை அதிகம் உள்ளதும் இந்த டாப் 5 நகரங்களில் மாசுபாடு அதிகரிப்பிற்கு முக்கியம் காரணம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
14-பிப்-201914:51:02 IST Report Abuse
தமிழ்மைந்தன் அப்போ
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-பிப்-201911:56:48 IST Report Abuse
Apposthalan samlin மக்கள் தொகை சீனாதான் அதிகம் கடந்த காலங்களில் மாசு பாட்டில் முன்னணியில் இருந்தது இப்பொழுது கட்டு பாட்டில் உள்ளது .நம்மால் ஏன் முடிய வில்லை. பெட்ரோல் டீசல் கு பதிலாக அப்துல் கலாம் சொன்ன மாதிரி நைட்ரோஜென் எரி பொருளை கண்டு பிடிக்க வேண்டும்.சூரிய ஒளியில் ஓடும் வாகனங்கள் தயாரிக்கலாம் பாட்டரி இல் ஓடுகின்ற வாகனங்களை தயாரிக்கலாம்.
Rate this:
Share this comment
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
14-பிப்-201916:54:28 IST Report Abuse
DSM .S/o PLM சீனாவில் மக்கள் தொகை அதிகம் . ஆனால் பரப்பளவில் சீனா இந்தியாவைப்போல் இரு மடங்கிற்கும் அதிகம்.. அதாவது மக்கள் அடர்த்தி சீனாவில் இந்தியா வை விடவும் குறைவு.. நகர் மயமாக்கல் இந்தியாவில் அதிகம். சீனாவில் தொழில் வளர்ச்சி பரவலானது. இந்தியாவில் அப்படி அல்ல . குறிப்பிட்டபடி சில நகரங்களில் மட்டுமே.. இதுதான் மாசுபடுதலுக்கு முக்கிய காரணம்,...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-பிப்-201911:30:12 IST Report Abuse
Natarajan Ramanathan கான்பூர் மிகமிக கேவலமான அபாயகரமான அசிங்கமான அசுத்தமான நரகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X