குடியிருப்பு அருகே வேகத்தடை தேவை: மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அண்ணா நகரில், குடியிருப்புகள் அருகே வையப்பமலை - மோர்பாளையம் சாலை உள்ளது. இப்பகுதி வளைவு சாலையாக இருப்பதால், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால், சாலையோரத்தில் வசிப்போர், எந்நேரத்திலும் அச்சத்துடனே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் ஏதும் பலனில்லை.
- எஸ்.சுரேஷ், கருங்கல்பட்டி
எரியாத மின்விளக்குகள்: குமாரபாளையம் - பள்ளிபாளையம் பிரிவு சாலையில், உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இதில், ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் எரிகிறது. இதனால், நகரின் மிக முக்கியமான போக்குவரத்து மிகுந்த மையப்பகுதியில் போதிய வெளிச்சமின்றி, இருள் சூழ்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், அனைத்து மின் விளக்குகளும் எரிவதற்கு தேவையான நடவடிக்கையை, அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
- எஸ்.ராஜ்குமார், குமாரபாளையம்.