நாமக்கல்: நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், 50வது விளையாட்டு விழா நேற்று நடந்தது. மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. அதை தொடர்ந்து, ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், மாணவியருக்கு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கோபிகா வரவேற்று பேசினார். இதில் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருளரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். கல்லூரி பேராசிரியைகள், மாணவியர் பங்கேற்றனர். மாணவி மோகனா நன்றி கூறினார்.