பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம்

Added : பிப் 14, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம் மற்றும் உலக வனநாள், உலக நீர் நாள் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா பரிசு வழங்கி பேசியதாவது: கடை, ஓட்டல்களுக்கு செல்லும்போது துணிப்பைகள் மற்றும் பாத்திரங்கள் எடுத்துச் செல்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். எந்த ஒரு அரசின் திட்டமும், மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே, அது வெற்றிகரமானதாக முடியும். பிளாஸ்டிக் கவர்களை நாம் தெருவில் வீசும்போது, அவை பல வழிகளில் நமது சூழலை கெடுக்கிறது. அவை காற்றில் பறந்து சென்று சாக்கடைகளில் சேர்ந்து, சாக்கடை நீர் செல்வதை தடை செய்கிறது. அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டால், பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை படைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் மகேஷ் குமார் ஆகியோர் பேசினர். முதன்மை கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X