டில்லியில் யாருக்கு அதிகாரம்: மாறுபட்ட தீர்ப்பு

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது.

டில்லி ஆம்ஆத்மி அரசு மற்றும் துணைநிலை கவர்னருக்கு இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்பது தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசு சார்பில் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் துணைநிலை கவர்னருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக 2018 ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டில்லி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதில், டில்லியில் நிலம், போலீஸ் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் டில்லி அரசுக்கு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்ய முடியாது எனக் கூறி நீதிபதி சிக்ரி, துணைநிலை கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்றார். நீதிபதி பூஷண், டில்லி அரசுக்கே அதிகாரம் என மாறுபட்ட தீர்ப்பை வாசித்தார். இதனால் டில்லி அரசு - துணைநிலை கவர்னர் இடையேயான யாருக்கு அதிகாரம் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது.
டில்லியை போன்று புதுச்சேரியிலும் துணைநிலை கவர்னர் - முதல்வர் இடையேயான மோதல் தீவிரடைந்து வருகிறது. கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில் யூனியன் பிரதேச அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-பிப்-201919:33:35 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இது போன்ற சிக்கலான வழக்கை விசாரிக்க முதலிலேயே மூன்று நீதிபதிகள் விசாரிக்க உத்தரவிட்டிருக்கலாமே எல்லாம் மிச்சமாகி இருக்கும். அரசுக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
14-பிப்-201918:53:52 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy It is obvious that the Judiciary is also divided based on political affiliation
Rate this:
Share this comment
Cancel
Raja -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-201913:51:15 IST Report Abuse
Raja People loss the faith of SC.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X