ப.வேலூர் அருகே குடோனில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பு கோரை கட்டுகள் நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ப.வேலூர் அருகே குடோனில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பு கோரை கட்டுகள் நாசம்

Added : பிப் 14, 2019
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, கோரை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 600க்கும் மேற்பட்ட காய்ந்த கோரை கட்டுகள் தீயில் எரிந்து நாசமாயின.
ப.வேலூர் தாலுகா, கருக்கம்பாளையத்தை சேர்ந்த நடராஜ், 50, கோரை விவசாயி. இவர், பொங்கலுக்கு முன்பிருந்தே கோரை விலை சரிந்ததால், அப்பகுதியிலுள்ள விவேக், 34, என்பவரது குடோனை வாடகைக்கு எடுத்து கோரை கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணியளவில் இவரது கோரை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதையடுத்து, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு விவேக் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் குடோனில் இருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 600 காய்ந்த கோரை கட்டுகள் தீயில் எரிந்து சேதமாயின. குடோன் முற்றிலுமாக சேதமடைந்தது. தீவிபத்து குறித்து, ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X