பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுகளை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 14, 2019
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கொந்தளம் பஞ்., அலுவலகத்தில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த, விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. தமிழகத்தில், வரக்கூடிய தேர்தல்களில் வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் ஓட்டுகளை யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், தேர்தல் ஆணையம் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. வாக்களித்த பின், ஏழு வினாடிகளில் வாக்காளர்கள் ஓட்டை சரி பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் ஆகிய விபரங்களை உள்ளடக்கிய அச்சிட்ட தாளை, ஏழு வினாடிகளுக்கு பார்ப்பதற்கு அனுமதிக்கும். இந்த விபரத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக, பல்வேறு பகுதிகளில் இதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று கொந்தளம் பஞ்., அலுவலக வளாகத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பாண்டமங்கலம் ஆர்.ஐ.,சேகர் மற்றும் அலுவலகப்பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X