பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 14, 2019
Advertisement

பல்லாங்குழி சாலை; மக்கள் கடும் அவதி: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, மேல்முகம் பஞ்சாயத்திற்குட்பட்ட, மானுவங்காட்டுபாளையத்தில் குடியிருப்புகள் அருகே பல ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழேவிழுந்து உடலில் காயங்கள் ஏற்படுகின்றன. சாலையை சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பு வேலியில் ஸ்டிக்கர் அவசியம்: எலச்சிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தி.கோடு- ராசிபுரம் நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது. இச் சாலையில் இரவு, பகல் என எப்போதும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, பள்ளி முன்பாக உள்ள தடுப்புவேலியில், இதுவரை ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தடுப்புவேலி தெரியாமல், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, தடுப்புவேலிக்கு ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்க வேண்டும்.

வடிகால் சுத்தம் செய்யப்படுமா? பள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, ஐந்துபனை பகுதியில் சாலையோரத்தில் வடிகால் செல்கிறது. இதில் குப்பை, கழிவுகள், கற்கள் அதிகளவு தேங்கியுள்ளதால், கழிவுநீர் செல்ல தடை ஏற்படுகிறது. இதனால் பல இடங்களில் கழிவுநீர் தேக்கமடைந்து, துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்படுகிறது. அருகில் வசிக்கும் பொதுமக்கள், கொசு தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வடிகாலை சுத்தம் செய்து சீரமைத்து, சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலம் கட்டும் பணி முடிக்கப்படுமா? குமாரபாளையம் அருகே, படைவீடு பகுதியில் பாலம் கட்டும் பணி பல மாதங்களாக மெத்தனமாக நடந்து வருகிறது. சேலம், பவானி, சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பாதை என்பதால், போக்குவரத்து மிகுதியாக உள்ளது. அருகில் சங்கர் சிமென்ட் ஆலை உள்ளதால், தினமும் லோடு ஏற்றிச்செல்லும் லாரிகளும் இந்த வழியாக செல்வதால், விபத்து அபாயம் உள்ளது. பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை தேவை.

சேதமடைந்த பாதுகாப்பு சுவர்: பள்ளிபாளையம் அடுத்த, சந்தைபேட்டை ஆற்றுப்பகுதியில் உள்ள மயானத்தின் பாதுகாப்பு சுவர், ஆற்றில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்ட போது சேதமடைந்து விட்டது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இதனை சீரமைக்காமல் உள்ளது. இதனால் பகல், இரவு நேரத்தில் மது அருந்தும் பாராக மாறிவிட்டதால், ஆற்றில் குளிக்கும் வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X