பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற மோகனூரில் ஹயக்ரீவர் லட்சார்ச்சனை விழா துவக்கம்

Added : பிப் 14, 2019
Advertisement

மோகனூர்: பள்ளி, மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றிபெற, கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில், ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா, நேற்று கோலாகலமாக துவங்கியது.
மோகனூர், கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், கல்வி கடவுளாகிய லட்சுமி ஹயக்ரீவர் பெருமாளுக்கு, மாணவ, மாணவியர் கல்வியிலும், தொழில் வளர்ச்சி அடையவும், இயற்கை சீற்றம் தணியவும், பருவமழை காலத்தே பொழிந்து நதிநீர் வளம் பெற்று விவசாயம் மேன்மை அடையவும், லட்சார்ச்சனை பெருவிழா நேற்று துவங்கியது. காலை, 9:00 மணிக்கு ஹயக்ரீவர் திருமஞ்சனம், மாலை, 4:30 மணிக்கு லட்சார்ச்சனை நடந்தது. இன்று (பிப்., 14) முதல், வரும், 16 வரை, தினமும் காலை, 8:30 மணிக்கு அபி?ஷகம், லட்சுமி ஹயக்ரீவ சதுர்ஷ்டி, மாலை, 4:30 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. வரும், 17 ல், காலை, 7:00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு, ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம், அன்னதானம் வழங்குதல், மாலை, 6:00 மணிக்கு, ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி, கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X