படித்துறையில் தடுப்பு வேலி: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

படித்துறையில் தடுப்பு வேலி: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

Added : பிப் 14, 2019
Advertisement

ப.வேலூர்: நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமான கபிலர்மலை அடுத்த ஜேடர்பாளையம் படுகையணைக்கு தினமும், 100க்கும் மேற்பட்டோரும், விடுமுறை நாட்களில், 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக காவிரியாற்றிலும், அதிலிருந்து பிரியும் ராஜா வாய்க்காலிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் சமயங்களில், படுகையணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது, பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், ராஜா வாய்க்கால் ஷட்டர் உள்ள பகுதியில் இருந்து குறிப்பிட்ட பகுதி வரை, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக குளிப்பதற்கு படித்துறையும், தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்பு வேலி அடித்து செல்லப்பட்டது. மீண்டும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் வாய்க்காலின் மையப்பகுதிக்கு சென்று குளிக்கின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது: ஜேடர்பாளையம் படுகையணைக்கு, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஏராளமானோர் வருகின்றனர். அப்போது, குளிக்கும்போது தண்ணீரில் பலர் அடித்து செல்லப்படுகின்றனர். புதிதாக வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா, படுகையணையை சுற்றி பார்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, ராஜா வாய்க்கால் படித்துறை பகுதியில், தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X