நீதிமன்ற உத்தரவை மீறி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் 'ஜோர்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவை மீறி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் 'ஜோர்'

Added : பிப் 14, 2019
Advertisement

கரூர்: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, கரூர் அமராவதி ஆற்றுப்பகுதியில், இரவில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திச் செல்வது ஜோராக நடக்கிறது.
மேலப்பாளையம் மணல் குவாரியில் மணல் அள்ள, உயர்நீதி மன்ற மதுரை கிளை கடந்த மாதம் தடை விதித்தது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், அமராவதி ஆற்றில், கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளுக்கும் தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கடந்த மாதம், 31ல், மேற்கண்ட மூன்று குவாரிகளுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஆனால், அமராவதி ஆற்றுப்பகுதியில் தினமும் இரவு, 11:00 மணி முதல், காலை, 4:00 மணி வரை, மாட்டுவண்டிகளில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிச் செல்வது தொடர்கிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மீறி நடந்து வரும் மணல் திருட்டை, பொதுப்பணித் துறை, போலீஸ் துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். குறிப்பாக, பஞ்சமாதேவி அமராவதி ஆற்றுப்பகுதியில் கடந்த, 9 அன்று இரவு, 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X