துவங்கியது கோடை வெயில்: நிழற்கூடங்களை சீரமைக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துவங்கியது கோடை வெயில்: நிழற்கூடங்களை சீரமைக்க கோரிக்கை

Added : பிப் 14, 2019
Advertisement

கரூர்: கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சேதமடைந்துள்ள நிழற்கூடங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை உள்ளன. உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு, பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். திருச்சி செல்லும் சாலையில் உள்ள புலியூர், வீரராக்கியம், மணவாசி, மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து நிறைய தொழிலாளர்கள் பஸ் மூலம் கரூருக்கு வந்து செல்கின்றனர். நெடுஞ்சாலையில் முக்கிய நிறுத்தங்களில், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் அவற்றில் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இருக்கைகள் கழன்று, காணாமல் போய்விட்டன. பயணிகள் மழை மற்றும் வெயிலுக்கு நிழற்கூடத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு கோடை காலத்தையொட்டி, கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி, சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடங்களை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X