பொது செய்தி

தமிழ்நாடு

ஆமை வேகத்தில் நகராட்சி கட்டட பணிகள்: பொதுமக்கள் அதிருப்தி

Added : பிப் 14, 2019
Advertisement

கரூர்: கரூர் நகராட்சியின் புதிய கட்டட பணிகள் முடிக்கப்படாமல், மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியாக உள்ளன. கடந்த, 2011 வரை, கரூர் நகராட்சியில், 28 வார்டுகள் இருந்தன. நகராட்சி கூட்டம், 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெத்தாச்சி கட்டடத்தில், நடந்தன. இந்நிலையில் கடந்த, 2011 அக்., மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, கரூர் நகராட்சியுடன், இனாம் கரூர், தான்தோன்றிமலை நகராட்சிகள், சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து ஆகியவை இணைக்கப்பட்டன. இதையடுத்து, வார்டுகளின் எண்ணிக்கை, 48 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், கரூர் நகராட்சி தலைவர் பதவியை, அ.தி.மு.க., முதன் முறையாக கைப்பற்றியது. ஆனால், 48 கவுன்சிலர்கள், அதிகாரிகள் அமர்ந்து நகராட்சி கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பழமை வாய்ந்த பெத்தாச்சி கட்டடத்தை இடித்து விட்டு, கூட்ட அரங்குடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த, 2015ல் துவங்கியது. ஆனால், மூன்றரை ஆண்டுகள் ஆகியும், கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், கட்டட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X