பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 14, 2019
Advertisement

வணிக வளாகம் கட்டடம் விரிசல்: கரூர் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி சார்பில் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. சரியான பராமரிப்பு இல்லாமல், பலவீனமான நிலையில் இருக்கின்றன. கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. மழை பெய்யும்போது, விரிசல் வழியாக நீர் ஒழுகும் நிலை உள்ளது. அபாய நிலையில் உள்ள கட்டடத்தால் பீதி ஏற்படுகிறது.
சரியான வடிகால் வசதி தேவை: கரூர், இந்திராநகரில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதி மக்கள் அன்றாட பயன்பாட்டுக்காக தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதில் வெளியேறும் கழிவுநீர், தொட்டியின் அருகே குளம்போல் தேங்கி நிற்கிறது. வடிகால் சுற்றி செடிகள் ஆக்கிரமித்துள்ளததால், தண்ணீர் செல்ல வழியில்லை. கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. சுகாதார சீர்கேடால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சரியான முறையில் வடிகால் வசதி செய்ய வேண்டும்.

உடைந்த நிலையில் குப்பைத் தொட்டி: கரூர் தெற்கு காந்திகிராமம் வீட்டுவசதி வாரிய பூங்கா அருகே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி, உடைந்து ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் கொட்டும் குப்பை, உடனே சாலைக்கு வந்து விடுகிறது. குப்பையை அள்ள வரும் போது, துப்புரவு பணியாளர்கள் சாலைகளில் கிடக்கும் குப்பையை அள்ளாமல் விட்டுவிடுகின்றனர். காற்று வீசும் போது, குப்பை பறப்பதால், வாகன ஓட்டிகள் திணறும் சூழ்நிலை ஏற்படுகிறது. குப்பைத் தொட்டிகளை மாற்ற வேண்டும்.

குடியிருப்பை சுற்றி விஷ ஜந்துகள்: கரூர் வடக்கு காந்திகிராமம் ஹவுசிங் யூனிட் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள சாலையோரம் செடி, கொடிகள் புதராக வளர்ந்துள்ளன. இதனால் அப்பகுதியில், பாம்பு உட்பட விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இரவு நேரத்தில், குடியிருப்பு பகுதியில் விஷ ஜந்துகள் புகுந்து விடுவதால், மக்கள் அச்சத்துடன் தூங்க வேண்டி உள்ளது. சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

அதிக புகையால் பயணிகள் பாதிப்பு: கரூர் பஸ் ஸ்டாண்ட்டில் ஏராளமான உணவகங்கள் செயல்படுகின்றன. அவற்றில், சமையல் செய்யும் போது வெளியேறும் புகை பஸ் ஸ்டாண்ட் முழுவதும் செல்கிறது. சாலையை மறைக்கும் அளவுக்கு புகை எழுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். குறிப்பாக பஸ்கள் செல்லும் போது சாலை சரியாக தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள், அதிக அளவில் புகை வெளியேற்றும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X