கரூர் கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா

Added : பிப் 14, 2019
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட கோவில்களில் நடந்த, ராகு கேது பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நேற்று நடந்த ராகு, கேது பெயர்ச்சியையொட்டி கடந்த, 11 முதல், கல்யாண பசுபதீஸ் வரர் கோவிலில் லட்ச்சார்ச்சனை, நவக்கிரக அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணி முதல், நவக்கிரக சன்னதியில், ராகு, கேது சுவாமிக்கு, மூலமந்திரயாகம், அஸ்திர ஹோமம், கலாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் சூர்ய நாராயணன், செயல் அலுவலர் ராஜாராம் மற்றும் சிவாச்சாரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று மதியம், ராகு, கேது பெயர்ச்சி முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


* குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற ராகு கேது பெயற்சி விழாவில், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதேபோல், குளித்தலை கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X