பொது செய்தி

தமிழ்நாடு

சேவல்கட்டு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி: அரவக்குறிச்சியில் ஏற்பாடு மும்முரம்

Added : பிப் 14, 2019
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்துள்ள பூலாம்வலசு கிராமத்தில், சேவல்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை விலக்கிக் கொண்டதால், அங்கு போட்டி நடத்த தேவையான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த, பூலாம்வலசு கிராமத்தில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பொங்கல் விழாவின் போது, ஐந்து நாட்கள் சேவல் கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், போட்டி சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் சேவல் கட்டு போட்டி நடத்த, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அப்பகுதி மக்கள், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தும், கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில், பொங்கல் பண்டிகையின் போது, சேவல்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடர்ந்தனர். அங்கேயும் அனுமதி கிடைக்காததால், பொங்கல் பண்டிகை அன்று போட்டி நடத்தும் முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில், தொடர் முயற்சியாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையை மீண்டும் நாடியதில், கடும் நிபந்தனைகளுடன், வரும் 15, 16, 17 தேதிகளில், பூலாம்வலசு கிராமத்தில், சேவல் கட்டு போட்டி நடத்த, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு போட்டி நடத்த தேவையான கட்டமைப்பு வசதிகளை, அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X