லோக்சபா தேர்தல் எதிரொலி: எஸ்.ஐ.,க்கள் 16 பேர் பணியிட மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் எதிரொலி: எஸ்.ஐ.,க்கள் 16 பேர் பணியிட மாற்றம்

Added : பிப் 14, 2019
Advertisement

கரூர்: லோக்சபா தேர்தலையொட்டி, திருச்சி சரகத்தில், 113 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூரில், 16 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
வரும் மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம், முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஒரே இடத்தில், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசாரை, பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷன், மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். திருச்சி போலீஸ் சரகத்தில் உள்ள, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்டங்களில் பணியாற்றி வந்த, 113 போலீஸ் எஸ்.ஐ.,க்கள், நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூரில் இருந்து, 16 பேர் மாற்றப்பட்டுள்ளனர். கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய ராஜேஸ்வரி, பிரபாகரன், லட்சுமி, கணேசன், வெள்ளியணை முகமது ஜாபர், வாங்கல் ராஜேஸ்வரி, கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கிருத்திகா, பானுமதி, க.பரமத்தி செல்ல முத்து, குளித்தலை லதா, முத்துகுமார், பால விடுதி பாலசுப்பிரமணி, சிந்தாமணிப்பட்டி பிரபு, குற்றப்பிரிவு விவேகானந்தன், குற்ற ஆவண காப்பகம் சத்திய பிரியா ஆகியோர், திருச்சி மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 13 எஸ்.ஐ.,க்கள், திருச்சி உள்ளிட்ட, வெளி மாவட்டங்களில் இருந்து, கரூருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X