பொது செய்தி

தமிழ்நாடு

முதலீடுகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்

Added : பிப் 14, 2019
Advertisement

குளித்தலை: மகளிர் குழுவினர் பங்கு வர்த்தகத்தில் சிறிய முதலீடுகள் செய்து அதிக லாபம் பெற வேண்டும் என தளிஞ்சியில் நடந்த முதலீடுகள் பற்றிய பெண்களுக்கான விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது. குளித்தலை அடுத்த, தளிஞ்சி கிராமத்தில், முதலீடுகள் பற்றிய பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று மாலை, 4:00 மணியளவில், செபி நிறுவனம் சார்பில் நடந்தது. இதில், மணப்பாறை செபி நிறுவனத்தின் முதன்மை பயிற்றுனர் பாலகிருஷ்ணன், மகளிர் குழுவினர் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். செபி நிறுவனத்தின் செயல்பாடுகள், தேசிய பங்குச்சந்தை, மும்மை பங்குச்சந்தை, மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத்துறை திட்டங்கள் ஆகியவற்றிற்கும் மகளிர் குழுக்கள் பாதுகாப்பான, அரசு சார்ந்த பங்கு வர்த்தகத்தில் சிறிய முதலீடு செய்து லாபம் பெறுதல், தேசிய பங்குச்சந்தை குறியீடுகள், பங்கு வர்த்தகம் செய்யும் முறைகள், டிமேட் வங்கி கணக்கு மின்னணு முறை பரிவர்த்தனைகள், நிதி மேலாண்மை ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முகாமில், மகளிர் குழுக்கள் மற்றும் விவசாயிகள் அரசு பங்குகளில், பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற வலியுறுத்தப்பட்டது. இம்முகாமிற்கு, உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் வளர்மதி, முதன்மை பயிற்றுனர்கள் சத்யா, கோமளம் ஆகியோர், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பயிற்சி அளித்தனர். இதில் குளித்தலை, தோகைமலை பகுதி மகளிர் குழுவினர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X