பொது செய்தி

தமிழ்நாடு

யாருக்கு ஓட்டுபோட்டோம் என்பதை காட்டும் இயந்திரம் குறித்து செயல் விளக்கம்

Added : பிப் 14, 2019
Advertisement

கரூர்: கரூர் தாந்தோன்றிமலையில் தோரணக்கல்பட்டி ஓட்டுச்சாவடி மையத்தில், யாருக்கு ஓட்டுபோட்டோம் என்பதை அறிந்துகொள்ளும் வசதியுள்ள புதிய ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம், செயல்விளக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, வருவாய் ஆய்வாளர் சிவகாமி தலைமை வகித்தார். வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்தில், ஓட்டு பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை இயந்திரம் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஆறு வாகனங்கள் வீதம் மொத்தம், 24 வாகனங்கள் கடந்த, 9 முதல், மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் வாக்காளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த இரண்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கரூர் மாவட்டத்தில், 608 ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் உள்ள, 1,031 ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு குழுவினரும், தினமும் நான்கு ஓட்டுச்சாவடி அமைவிடங்களுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X