படித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள்: கெஜ்ரிவால்| Dinamalar

படித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள்: கெஜ்ரிவால்

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (126)
Advertisement

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலில் படித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள். கடந்த முறை ப்ளஸ் 2 படித்த பிரதமரை தேர்வு செய்தது போல் மீண்டும் தவறு செய்து விடாதீர்கள் என ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.



எதிர்க்கட்சிகள் நேற்று (பிப்.,13) நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், கடந்த முறை ப்ளஸ் 2 படித்தவரை நாட்டின் பிரதமர் ஆக்கி விட்டீர்கள். இந்த முறையும் அதே தவறை செய்து விடாதீர்கள். படித்தவரை பிரதமராக தேர்வு செய்யுங்கள். ஏனெனில் ப்ளஸ் 2 பாஸ் செய்தவரால், அவர் போடும் கையெழுத்துக்களால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ள முடியாது.



மோடி அரசை வேரறுக்கவே இந்த தர்ணா போராட்டம். 2011 ம் ஆண்டு ஏப்ரல் 4 ஜந்தர்மந்தரில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு பிறகு அன்றைய அரசு அகற்றப்பட்டது. ரபேல் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை வெளிவந்தால் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும்.
மேற்குவங்கத்தில் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மோடி வீட்டு சொத்து இல்லை. அங்கு கமிஷனரை கைது செய்தால் அதற்கு பிறகு நாட்டில் உள்ளவர்களுக்கு மாநில அரசு மீது பயம் இருக்காது. மோடி அரசு மீதே பயம் இருக்கும். மோடி ஒன்றும் பாக்., பிரதமர் இல்லை. பாக்., பிரதமரை போல் நினைத்துக் கொண்டு டில்லியையும், காங்., ஐயும் மோடி விமர்சித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மோடியும், அமித்ஷாவும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றனர். பா.ஜ.,வை வீழ்த்த நாங்கள் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாசுதேவன் - சென்னை,இந்தியா
19-பிப்-201910:54:54 IST Report Abuse
வாசுதேவன் பிரதமர் மட்டும் படித்தவரா இருக்கனுமா அல்லது மாநில முதல்வர்களுமா.? அப்போ உங்கூட மேடையில நிக்கறவங்க கதி...?
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
19-பிப்-201910:13:36 IST Report Abuse
Ram Sekar சிறுபான்மை காவலர்களாக "காங்கிரஸ்" மற்றும் "திமுக"வின் "தாசர்கள்" வருவது புரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
15-பிப்-201917:03:22 IST Report Abuse
srinivasan நேரு பள்ளிக்கு செல்லவில்லை. பணத்தினால் ஆசிரியர்களை வீட்டுக்கு வரவழைத்தார். எனவே மக்களின் துன்பங்கள் தெரிந்து கொள்ளவில்லை. குடும்பமே அப்படிதான். எனவே முறையாக படிக்காத நேரு குடும்பம் லாயக்கு இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X