அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? : கிரண்பேடி

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (84)
Advertisement

சென்னை : ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? இதனை வலியுறுத்தியது தவறா? என புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பி உள்ளார்.






கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, முதல்வர் தர்ணாவில் ஈடுபடுவது முறையானதா? 36 பிரச்னைகள் தொடர்பாக பிப்.,7 ம் தேதியன்று நாராயணசாமி எனக்கு கடிதம் அனுப்பினார். அதில் பாதி தீர்க்கப்பட்டு விட்டது.
நியாய விலைக்கடை போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. அவரது கடிதத்திற்கு பதிலளிக்க அவகாசம் கொடுக்காமல் தர்ணா செய்கிறார். பிப்.,21 அன்று காலை அவரை சந்திக்க நேரம் அளித்துள்ளேன். இன்று முதல் நான் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். பிப்.,20 அன்று நள்ளிரவு தான் திரும்புவேன் என கூறிவிட்டேன். ஆனால் முன்னறிவிப்பின்றி தர்ணா செய்து வருகிறார்.
ஹெட்மெட் அணிவது கட்டாயம் என ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஆகியன உத்தரவிட்டுள்ளன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தினமும் ரேடியோவில் பேசி வருகிறார். ஆனால் அவகாசம் வழங்க வேண்டும் என நாராயணசாமி சொல்கிறார். எவ்வளவு நாள் அவகாசம் அளிக்க வேண்டும்.





ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது தவறா? மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறு. நாராயணசாமி கடிதம் அளித்ததற்கு பதிலாக அவகாசம் அளித்திருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கி கடிதமும் அனுப்பி விட்டேன். பிப்.,21 அன்று காலை 10 மணிக்கு வாருங்கள் பேசலாம் என கூறிவிட்டேன்.
நாராயணசாமி அளித்த கடிதத்தில் இருந்தவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டவை. நேற்று கடிதம் அளித்து விட்டு, அவகாசம் கொடுக்காமல், முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்துகிறார். மக்கள் ஹெல்மெட் அணிய அவர் அனுமதிக்கவில்லை. நீங்கள் உடனடியாக பதிலளிக்காவிட்டால் நான் பிப்.,13 முதல் தர்ணா நடத்துவேன் என்று கூட அவர் கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-பிப்-201904:24:45 IST Report Abuse
meenakshisundaram பாண்டிச்சேரி அரசு 'இலவச ஹெல்மெட் 'வழங்கும் திட்டத்தை உடனடியாக கொண்டு வரலாம்.எதற்கும் அதன் முதல்வர் ஒரு நடை சென்னைக்கு வந்து ஸ்தாலினை கலந்தாலோசிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
14-பிப்-201920:41:13 IST Report Abuse
tamil தவறில்லை, யார் யார் என்ன என்ன வேலை செய்யவேண்டுமோ அதை அவரவர்கள் செய்தால் நலம், இப்படி ஷோ காட்டுவதில் எந்த பயனும் இல்லை, அது ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் வேலை, உங்கள் வேலை இல்லை,
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
14-பிப்-201919:19:58 IST Report Abuse
Ramalingam Krishnaswamy மேதகு துணைநிலை ஆளுநரின் இத்தகு தலைக்கவசம் மீதான அபரிமிதமான அக்கறை மதுகுடிப்பவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் பால் ஏன் செல்லவில்லை என்பது வியப்பளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X