புதுடில்லி : யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஒரு அரசாங்க அதிகாரிகளை கூட மாற்ற முடியாது என்றால் எவ்வாறு அரசு செயல்படுவது? 67 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியின் அரசுக்கு உரிமைகள் கிடையாது. ஆனால் 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற கட்சிக்கு அந்த உரிமைகள் உள்ளதா என்றார்.