மோடி, நிதிஷ் கூட்டணி: பலத்தை காட்டப்போகுது பேரணி

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியும் பீகார் முதல்வர் முதல்வர் நிதிஷ்குமாரும் சேர்ந்து, மார்ச் 3ம் தேதி நடத்தப் போகும் பேரணி, தே.ஜ., கூட்டணியின் ஒற்றுமையையும் பலத்தையும் காட்டப் போகிறது.கடந்த பிப்.3ம் தேதி ராகுல், பாட்னாவில் ஒரு பேரணியை நடத்திக் காட்டினார். அதற்குப் போட்டியாக தே.ஜ., கூட்டணி இந்த பேரணியை நடத்துகிறது என்கிறார்கள்.






மோடியும் நிதிஷூம் பல அரசு விழாக்களில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். ஆனால், அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்வது, பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது.


அன்று நடந்தது என்ன

கடைசியாக இவர்கள் 2010ம் ஆண்டு பஞ்சாப்பின் லுாதியானாவில் நடந்த கூட்டத்தில் தான் ஒன்றாக கலந்து கொண்டனர்.அப்போது குஜராத் முதல்வராக மோடி இருந்தார். கூட்ட மேடையில் நிதிஷின் கைகளைப் வலுக்கட்டாயமாக பிடித்து மோடி உயர்த்தினார். ஆனால் கையை உயர்த்த விருப்பமின்றி நிதிஷ் ‛கம்' என நின்றுகொண்டு இருந்தார்.





மோடியின் கையைப் பிடித்தால் முஸ்லீம் ஓட்டுகள் கிடைக்காதோ என அப்போது பயந்தார் நிதிஷ்.அடுத்த சில நாட்களில் பாட்னாவில் நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள மோடி வந்தபோது விளம்பரங்களில், லுாதியானாவில் நிதிஷ் கையைப் பிடித்து மோடி உயர்த்திய போட்டோ பயன்படுத்தப்பட்டது. இதை நிதிஷ் ரசிக்கவில்லை. அன்று மோடியுடன் நடக்க இருந்த இரவு விருந்தை நிதிஷ் ரத்து செய்தார்.
அதோடு விட்டாரா நிதிஷ்?. பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு மோடி அனுப்பி வைத்த ரூ.5 கோடிக்கான காசோலையை திருப்பி அனுப்பினார். இதையெல்லாம் அப்போது கேட்பார் இல்லை. அத்வானி உள்பட, நிதிஷின் செயல்பாடுகளை கேட்கக் கூடிய தலைவர் யாரும் பா.ஜ.,வில் இல்லை.







உச்சக்கட்ட கருத்து வேறுபாடு

அப்போது இருந்தே மோடிக்கும் நிதிஷூக்கும் கருத்து வேறுபாடு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தே வந்தது. 2013ல் இது உச்சத்தை எட்டியது. பா.ஜ., உடனான உறவை துண்டித்தார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ். பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதை நிதிஷ் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலுக்குப் பிறகு, லாலுவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தார் நிதிஷ்.லாலுவுடன் ஒத்துப் போவது சாதாரண விஷயமா என்ன?





இருவருக்கும் பிரச்னை ஏற்பட, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள 2017 ல் பா.ஜ., உதவியை நாடினார் நிதிஷ். இதெல்லாம் பழைய கதை. இப்போது நடக்கப் போகும் தேர்தலில் மீண்டும் பா.ஜ.,வுடன் கைகோர்த்துள்ள நிதிஷ், ஆளுக்கு 17 இடங்களில் போட்டியிட சம்மதித்துவிட்டார். மீதி இடங்களில் பஸ்வான் கட்சி போட்டியிடுகிறது.


காங்., கூட்டணிக்கு சவால்

சீட் ஒதுக்குவதில் ராஷ்டிரீய ஜனதா தளத்துக்கும் (ஆர்.ஜெ.டி.,) காங்.,கிற்கும் இடையே இன்னும் இழுபறி நீடிக்கிறது. காங்.,கிற்கு 8 இடம் ஒதுக்க ஆர்.ஜெ.டி., தயாராக உள்ளது. காங்., 12 இடங்கள் கேட்கிறது. ஏனெனில் ‛‛2014ல் 12 இடங்களில் தானே போட்டியிட்டோம்'' என காரணம் சொல்கிறது காங்.,ஏற்கனவே காங்.,கிற்கும் ராஷ்டிரீய ஜனதா தளத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு தொடரும் நிலையில், தே.ஜ.,கூட்டணியின் பேரணி நடக்கப் போகிறது. இது, மற்ற கட்சிகளுக்கு சவாலாக அமைய வேண்டும் என்பதில் தே.ஜ., கூட்டணி முனைப்பாக இருக்கிறது. அதை செய்யாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் சூரியன் உதிக்கட்டும் ஆறு மாசத்திற்கு முன்னர் கழுவி கழுவி ஊத்திக்கொண்டவர்கள் இப்போ நேருக்கு நேர் பார்ப்பார்களா
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201919:01:05 IST Report Abuse
முக்கண் மைந்தன் "பலத்தை..." - ஆமா... RAFAL லு பலம், பட்டேலு செலெ பலம், Clean Ganges செஞ்செ பலம், etc ., etc., இப்டி பல ஆட்டய போட்டெ பலங்க இருக்கே...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201918:58:40 IST Report Abuse
நக்கல் மோடிக்கு எப்பவும் எதிரா கருத்தெழுதர தேச விரோதிகள் ஏன் உண்மையான பெயரில் எழுத பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X