அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வலுவான கூட்டணி: அமித்ஷா பேச்சு

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (44)
Advertisement

ஈரோடு: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவிற்கு, பா.ஜ., வலுவான கூட்டணி அமைக்கும் என அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.


தேவை அறிய

ஈரோடு வந்துள்ள அமித்ஷா நெசவாளர்கள் மத்தியில் பேசியதாவது: பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து நீங்களும் கருத்து கூறலாம். பொது தேர்தலில் மோடி தலைமையிலான அணி வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும். மக்களின் பங்களிப்போடு ஆட்சி நடத்த வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்.

மக்களின் தேவைகளை கேட்டு அறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இணைக்க உள்ளோம். மக்களில் ஒவ்வொரு பிரிவினரின் தேவை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பின்னடைவை சந்தித்த நெசவு தொழிலை, மீட்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில், ஜவுளித்துறைக்காக மத்திய அரசு ரூ.1,230 கோடி ஒதுக்கி உள்ளது.








ஊழல் கூட்டணி



திமுக- காங் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை. ஊழல் கூட்டணி. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவிற்கு பா.ஜ., வலுவான கூட்டணி அமைக்கும். ஒரு பக்கம் ஊழல் கூட்டணி உள்ளது. மறுபக்கம் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் கூட்டணி உள்ளது. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.











எதிர்க்கட்சிகள் இருக்காது



இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், லோக்சபா தேர்தலுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளே இல்லாத அளவிற்கு பா.ஜ., வெற்றி பெறும். தமிழகத்தில் அமையும் கூட்டணியால், எதிர்க்கட்சிகளே இருக்காது. திமுக கூட்டணி ஜனநாயக கூட்டணி இல்லை. பா.ஜ., கூட்டணி தான் உண்மையான ஜனநாயக கூட்டணி எனப்பேசினார்.


உறுதி

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை பேசியதாவது: இந்த முறை, தமிழகத்திலிருந்து அதிக எம்.பி.,க்களை பா.ஜ.,வுக்கு பெற்றுத்தருவோம். அமித்ஷா கால் பதிக்கும் இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம் எனப்பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-201904:06:20 IST Report Abuse
J.V. Iyer இந்தியா ஒருமைப்பாட்டுக்கு ஊறு வளைவிக்குமாறு பேசும் தமிழ் நாட்டில் உள்ள தேச துரோகிகளை சிறை உள்ளே தள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-பிப்-201922:26:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், லோக்சபா தேர்தலுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளே இல்லாத அளவிற்கு பா.ஜ., வெற்றி பெறும். // பொன்னர் ஒரு தீர்க்கதரிசி.. அதாவது, இவங்க தோத்துருவங்களாம்.. அதுவும் எதிர்க்கட்சி கூட ஆக முடியாத அளவுக்கு கேவலமா தோத்து காணாம போயிடுவாங்களாம்.. அதை தான் அழகா வெண்பா கவிதையில் பாடுறாரு..
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-பிப்-201901:35:04 IST Report Abuse
Cheran Perumalவடக்கே உங்க கூட்டம் ராணுவ வீரர்களை சாகடித்துவிட்ட தெனாவெட்டில் கருத்துக்களெல்லாம் தெம்பா வருது? கொஞ்சம் பொறு, அதுக்கு சரியான முறையில் பழிவாங்கினப்புறம் பாக்கி வசனத்தை வெச்சுக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-பிப்-201922:24:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்படியே அந்த 21 எம்.எல்.ஏ சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வைக்க சொல்லி உங்க "வலுவை" நிரூபிக்கலாமே, கோழை கோமாளிகளே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X